தமிழ் நாடு

செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா வேட்பு மனுக்களும் ஏற்பு!

Staff Writer

கோபிசெட்டிபாளையம் தொகுதியில் த.வெ.க. மூத்த நிர்வாகி செங்கோட்டையன் தாக்கல்செய்த வேட்பு மனு ஒருவழியாக கடைசி நேரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

முன்னதாக, அவருடைய வேட்பு மனுவில் வருமான வரி தொடர்பான விவரங்களும் சான்றுரைத்த வழக்குரைஞரின் தகுதியும் தவறு என மாற்று கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையடுத்து மனு பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டது. 

பிற்பகலில், பிரச்னைக்குரிய விவகாரங்கள் தொடர்பான ஆவணங்களை செங்கோட்டையன் தரப்பில் சமர்ப்பித்தனர். அதையடுத்து அவருடைய மனு கடைசியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதைப்போலவே காலையில் த.வெ.க.வின் இன்னொரு நிர்வாகியான ஆதவ் அர்ஜூனா போட்டியிடும் வில்லிவாக்கத்தில் அவரது மனு தொடர்பாகவும் பிரச்னை எழுந்தது. அவரின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிறகு அவருடைய மனு ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

த.வெ.க. சார்பில் எடப்பாடியைத் தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் மனுக்களும் ஏற்கப்பட்டுவிட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதன்படி, அக்கட்சி 233 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பது உறுதியாகியுள்ளது.