எடப்பாடி பழனிசாமி 
தமிழ் நாடு

ஓ. பன்னீர்செல்வத்தை சேர்க்க வாய்ப்பில்லை – இபிஎஸ் திட்டவட்டம்!

Staff Writer

அதிமுகவில் இணைய நான் ரெடி; எடப்பாடி பழனிசாமி ரெடியா என ஓ. பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், ”அதிமுகவிலிருந்து ஓபிஎஸ்- ஐ நீக்கியது பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு. இதனால், அவரை மீண்டும் அதிகவில் சேர்க்க எந்த வாய்ப்பும் இல்லை.” எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணைவாரா அல்லது திமுகவில் இணைவாரா என்ற கேள்வி இருந்து வந்தது.

இந்த நிலையில், இன்று பெரியகுளத்தில் செய்தியாளர்களை ஓபிஎஸ், “இன்றைக்கு எதிரும் புதிருமாக இருந்த டிடிவி தினகரன் அவர்களும், எடப்பாடி பழனிசாமியும் ஒன்றிணைந்திருக்கிறார்கள். தினகரன் நினைத்தால் இன்றைக்கு இபிஎஸ் உடன் பேசி இணைக்கலாம். அது யார் கையில் இருக்கிறது டிடிவி கையில் இருக்கிறது. நாங்கள் இணைய வேண்டும் என்று கூறி வருகிறோம். அவரும் இணைய வேண்டும் என்று தான் கூறி வருகிறார். அதில் இருந்து டிடிவியும் மாறுபடமாட்டார். அவர் அந்த கருத்தைஅதிமுகவில் வலியுறுத்த வேண்டும்.” என்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக சேலம் ஓமலூரில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ”அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுவிட்டார். அதனால் அவரை கட்சியில் சேர்ப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. இந்த முடிவு கட்சியின் பொதுச்செயலாளர் எடுத்த தனிப்பட்ட முடிவு இல்லை.” என திட்டவட்டமாக இபிஎஸ் பதிலளித்துள்ளார்.