முதல்வர் விஜய் 
தமிழ் நாடு

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த ஒலிம்பிக் நகரம்!

Staff Writer

சட்டப்பேரவையில் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் ஒலிம்பிக் நகரம் பற்றி அறிவிப்பை வெளியிட்டார். 

அந்த அறிவிப்பு விவரம்:

”தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகள், பிற சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களை வெல்லும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும்.

இந்த ஒலிம்பிக் நகரம், ஒலிம்பிக் தரத்திலான ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகமாக உருவாக்கப்படும்.

இதில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அரங்குகள், அதிநவீன விளையாட்டு உபகரணங்கள், உயர்தரச் செயல்திறன் பயிற்சி மையம், விளையாட்டு அறிவியல் மையங்கள், விளையாட்டு மருத்துவ மையங்கள், விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் தங்குவதற்கான இடங்கள் அமைக்கப்படும்.

இந்த வளாகம், தேசிய, சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு, ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லக்கூடிய திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கு உதவும் உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த விளையாட்டு மையமாகத் திகழும்.” என்று முதலமைச்சர் விஜய் கூறினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram