வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி 
தமிழ் நாடு

உருவானது மீண்டும் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

Staff Writer

வங்கக் கடலில் கடந்த வாரம் காற்றழுத்தத் தாழ்வால் பெருமழை பெய்து பல மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. 

வங்காள விரிகுடாவின் தெற்கு மத்தியப் பகுதிகளில் இன்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முறைப்படி அறிவித்துள்ளது.

இது அடுத்த இரண்டு நாள்களில் மேலும் வலுப்பெற்று, மேற்கு -வடமேற்குத் திசையில் தமிழகக் கடற்கரையை நோக்கி நகரக்க்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram