த.வெ.க. தலைவர் விஜய்யின் இன்றைய இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் ஆயிரம் பேருக்கு மட்டும்தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
”இசுலாமியச் சொந்தங்களின் புனிதத் திருநாளான ரமலான் திருநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தலைவர் விஜய் கலந்துகொள்ளும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, இன்று (18.03.2026, புதன்கிழமை) மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சி, தேர்தல் ஆணையத்தின் முறையான அனுமதி பெற்று, உள்ளரங்க நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. மேலும் 1000 பேர் மட்டுமே இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
” இந்த அழைப்பிதழ் பெற்றிருப்பவர்களைத் தவிர்த்து வேறு யாருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இல்லை. அழைப்பிதழ் இல்லாதவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதால், அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அழைப்பிதழ் பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.” என்றும் ஆனந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.