தமிழ் நாடு

போடியில் ஓபிஎஸ் போட்டி - திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு!

Staff Writer

திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஓபிஎஸ் சார்பில் அவரது மகன் விருப்ப மனு அளித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 2 ஆம் தேதி வரை விருப்பமனு வழங்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று மேலும் 4 நாட்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இன்று விருப்ப மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். மாலை 5 மணி வரை விருப்ப மனு வழங்கலாம்.

இந்தநிலையில் முன்னாள் எம்.பியும், முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மகனுமான ஓ.பி.ரவிந்தரநாத் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், போடி, ஆண்டிப்பட்டி ஆகிய 3 தொகுதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் போட்டியிட வேண்டும் எனவும், ஓ.பன்னீர்செல்வத்துக்காக போடி தொகுதியிலும், தனக்காக ஆண்டிப்பட்டி மற்றும் போடி தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பு கேட்டும் ரவீந்திரநாத் விருப்ப மனு வழங்கியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நாளை திருமங்கலம் அருகே நடைபெறவுள்ள இணைப்பு விழா பிரம்மாண்டமாக இருக்கும் என கூறியுள்ளார்.

தற்போது வரை 234 தொகுதிகளிலும் போட்டியிட திமுக சார்பில் சுமார் 10,000- க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.