மாணிக்கம் நெடுமாறன் 
தமிழ் நாடு

பாஸ்போர்ட் முடக்கம் - பழ. நெடுமாறனுக்கு ஏற்பட்ட துயரம்!

Staff Writer

உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறனின் மகன் மாணிக்கம் நெடுமாறன் (57) ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இன்று (அக்டோபர் 1, 2026) காலை இந்திய நேரம் 8.45 மணியளவில் இயற்கை எய்தினார்.

உலகத் தமிழர் பேரமைப்பு இதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொண்டுள்ளது.

" மாணிக்கம் நெடுமாறன் பல ஆண்டுகளாக மெல்பர்ன் நகரில் பணிபுரிந்து வந்தார். அவர் புத்த மதத்தைத் தழுவி புத்தத் துறவியாக வாழ்ந்து வந்தார். கடந்த ஒரு மாத காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்த நிலையில், இன்று காலை அவர் இயற்கை எய்தினார். அன்னாரது இறுதிச் சடங்குகள் புத்த மதப்படி மெல்பர்ன் நகரிலேயே நடைபெறும். பழ. நெடுமாறனின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டிருப்பதால் அவரும், அவரது துணைவியாரும் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள இயலாத நிலையில் உள்ளனர்." என்று அவ்வமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram