விஜய்யின் த.வெ.க. தலைமையகம் அமைந்துள்ள சென்னையை அடுத்த பனையூர் பகுதியில் கட்சியினர் அடிக்கடி வந்து செல்வதால் கூட்டம் திரள்கிறது. இதனால் அந்தப் பகுதி மக்கள் அவதிக்கு உள்ளாகிவருகின்றனர்.
இதைப் பற்றி அவர்கள் த.வெ.க. தலைமை அலுவலகத்தில் முறையிட்டும் தொல்லைகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.
அதையடுத்து, அவர்கள் காவல்துறையினரிடம் முறையிட்டுள்ளனர். அதன்பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று த.வெ.க.வில் சட்டப்பேரவைத் தேர்தல் விருப்ப மனு வழங்கல் தொடங்கியது.
இதையொட்டியும் அதிகமான அளவில் கட்சியினர் வந்து குவிந்தனர். அவர்கள் வந்த வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவைத்தனர்.
இதனால் உள்ளூர்ப் பகுதியினர் வெளியிடங்களுக்குச் செல்ல முடியாமலும் வெளியிலிருந்து அவரவர் வீடுகளுக்கு வரமுடியாமலும் அவதி அடைகின்றனர்.
இன்றைய களேபரத்தால் அப்பகுதி மக்கள் வழக்கத்தைவிட கோபமடைந்தனர்.
அங்கு வந்திருந்த ஊடகத்தினரிடம் அவர்கள் முறையிட்டனர்.