தமிழ் நாடு

கைதான எம்.எல்.ஏ. மகன் சர்ச்சை- பரிதாபங்கள் சேனல் வருத்தம்

Staff Writer

முதலமைச்சர் விஜய்யைக் காட்டமாகப் பேசி கைதாகி சிறையில் உள்ள தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனின் மகன் ஊடகத்தினரிடம் பேசும்போது வித்தியாசமாக நடந்துகொண்டார். இவர் முன்னதாக அ.தி.மு.க. ஆட்சியின்போதும் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி விமர்சித்தது கவனத்தை ஈர்த்தது.

இந்த முறை, அவரின் தந்தை மார்க்கண்டேயன் தி.மு.க.வில் சேர்ந்து சட்டமன்ற உறுப்பினராகவும் ஆனநிலையில், கைது அரங்கேறியது. 

அதையொட்டி தனக்கே உரிய பாணியில் பேசியது மட்டுமின்றி, முதலமைச்சர் விஜய்யின் மகன் குறித்தும் தேவையில்லாமல் வார்த்தையை விட்டார். 

இவரை மையப்படுத்தி, பரிதாபங்கள் சேனலில் அண்மையில் கிண்டல் காட்சிகள் வெளியாகின. அதற்கு, தி.மு.க.வின் ஐடி அணி செயலாளர் டி.ஆர்.பி. ராஜா வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.  

அதைத் தொடர்ந்து, பரிதாபங்கள் சேனலில் இன்று குறிப்பிட்ட காட்சிகளுக்காக வருத்தம் தெரிவித்துள்ளனர்.

யாரையும் புண்படுத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.