தவெக தலைவர் விஜய் 
தமிழ் நாடு

“ஒட்டுப்போட்ட துணி... ஒட்டவைத்த கண்ணாடி..!” - திமுக கூட்டணியை விமர்சித்த விஜய்

Staff Writer

உடைந்த கண்ணாடியை ஒட்டவைத்தது போன்ற கூட்டணியையைத்தான் திமுக அமைத்துள்ளது என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில், தவெக வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பேசிய விஜய், “வேட்பாளர்கள் அறிமுகம் கூட்டம் அல்ல; காப்பாளர்கள் அறிமுக கூட்டம் இது. நம்ம கட்சியினருக்கு தேர்தலை எதிர்கொள்ள அனுபவம் இல்லை என்று சொல்வார்கள். நமது வேட்பாளர்கள் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் என்று சொல்வார்கள்.

ஒரு எம்.எல்.ஏ. என்பவர் அனுபவத்தை வைத்துக் கொண்டு கொள்ளை அடிப்பவராக, கல்குவாரியை கொள்ளையடிப்பவராக, கேள்வி கேட்கும் பத்திரிக்கையாளர்களை தாக்குபவராக இருக்க கூடாது.

எம்.எல்.ஏ. என்றால் மக்களுக்கான எல்லை காப்பாளனாக இருக்க வேண்டும். நானே எல்லா இடத்திலும் எல்லா நேரத்திலும் களத்துக்கு செல்ல முடியாது அல்லவா? அதனால் தான் இவர்களை தேர்வு செய்திருக்கிறேன். மக்களோடு களத்தில் நிற்கும் வேட்பாளர்களைத்தான் தேர்வு செய்துள்ளேன். கட்சி ஆரம்பித்து 3 வருடம் ஆகிவிட்டது இன்னும் கூச்சல் சத்தம் நிற்கவில்லை. கூட்டம் ஓட்டாக மாறுமா என கேள்வி கேட்கிறார்கள்.

மக்கள் கூட்டணியான நமக்கும் ஸ்டாலின் சார் கூட்டணிக்கும் இடையேதான் போட்டியே. மக்கள் நல கூட்டணியின் மொத்த கட்சிகளும் இப்பது திமுகவிடம் தானே உள்ளது.

கிழந்த துணியை தைத்து வைத்தது போல ஒட்டுப்போட்ட கூட்டணி. உடைந்த கண்ணாடியை ஒட்டவைத்தது போன்ற கூட்டணியையைத்தான் திமுக அமைத்துள்ளது.” என்றார்.