தமிழ் நாடு

புறநகர் ரயில்கள் ரத்தால் மக்கள் கடும் அவதி… விரைந்து தீர்வு காணுங்கள்!

Staff Writer

சென்னையில் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்குச் செல்வோர் கடுமையாக அவதிக்கு ஆளாகியுள்ளதாக தமிழக எம்.பி.க்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தென்னக ரயில்வே இதற்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கனிமொழி எம்.பி.

நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் கடந்த சில நாள்களாக பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு வருவதும், அதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதும் வேதனையளிக்கிறது.

ஏற்கனவே 40 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றும் 49 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது, அன்றாடம் பணிக்குச் செல்வோர் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரை கடும் மனவுளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.

குறிப்பாக வரும் வாரங்களில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், தென்னக ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்.

மாணிக்கம் தாகூர் எம்.பி.

சென்னை மக்களின் துயரத்தை உடனடியாக தீர்க்க ரத்து செய்யப்பட்ட மின்சார ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும். மாற்று போக்குவரத்து ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டும். பயணிகளுக்கு தெளிவான விளக்கம் வழங்க வேண்டும்.

தமிழச்சி தங்கப்பாண்டியம் எம்.பி.

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் மின்சார ரயில் சேவைகள் குறக்கப்பட்டதாக வெளியாகும் தகவல் மிகவும் கலையளிக்கிறது. நடுத்தர மற்றும் ஏழை மக்களின் நம்பிக்கையான மின்சார ரயில் சேவைகளை திடீர்ன குறைத்தது அவர்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் முடிவாகும். இதை கடுமையாக கண்டிக்கிறேன். இந்த சேவை குறைப்பை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.