திருப்பரங்குன்றத்தில் மக்கள் போராட்டம் 
தமிழ் நாடு

திருப்பரங்குன்றம் மலை ஏற 50 பேருக்கு மட்டுமே அனுமதி!

Staff Writer

திருப்பரங்குன்றம் மலை ஏற 50 பேருக்கு மட்டுமே அனுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை தீபத்திருநாள் அன்று உச்சிப்பிள்ளையார் கோவிலில் ஏற்றப்பட்ட தீபத்தில் இருந்து தீயை எடுத்து, திருப்பரங்குன்றம் மலைமீது உள்ள தூணில், இன்று தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் பாதுகாப்பு அளிக்க சி.ஆர்.பி.எப். வீரர்கள் நேற்றிரவே வருகைபுரிந்தனர். திருப்பரங்குன்றம் மலைமீது உள்ள அளவைத் தூணில் தீபம் ஏற்றுவதைக் கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் இன்று காலை திருப்பரங்குன்றம் வந்தடைந்தனர்.

முன்னதாக, மலை மீது தீபம் ஏற்றுவதைப் பார்க்க பொதுமக்கள் 10 பேருக்கு மட்டுமே அனுமதி என்று போலீசார் கூறியதையடுத்து, அங்கு காத்திருந்த பொதுமக்கள் ஆவேசம் அடைந்தனர்.

பின்னர், இன்று மாலை 5 மணிக்கு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படும் என்றும், அதை மலை மீது ஏறிக் காண கோவில் பணியாளர்கள், பாதுகாப்பு படையினர், உரிய அனுமதி பெற்ற பக்தர்கள் உட்பட 50 பேருக்கு மட்டுமே அனுமதி என்று கூறப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram