பிளஸ் 2 பொதுத்தேர்வு 
தமிழ் நாடு

பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடங்கியது!

Staff Writer

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கி மாா்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தோ்வுகள் அனைத்தும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறுகிறது. இதில், முதல் நாளான இன்று தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களுக்கான தோ்வு நடைபெறுகிறது.

பிளஸ் 2 பொதுத்தோ்வை தமிழகம் முழுவதும் 8 லட்சம் மாணவ, மாணவிகள், 27,783 தனித் தேர்வர்கள், 281 கைதிகள் என மொத்தம் 8.27 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். இம் மாணவ, மாணவிகளுக்கு 3,412 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை மாவட்டத்தில் 250 மையங்களில் 67,516 பேர் எழுதுகின்றனர்.

தோ்வு மையங்களில் மாணவா்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவதைத் தவிா்க்கும் பொருட்டு 4,540 பறக்கும் படை உறுப்பினா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். மாணவா்களுக்குத் தோ்வு மையங்களில் போதிய கழிப்பறை, குடிநீா் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் மாணவா்கள் உரிய நேரத்தில் தோ்வு மையங்களைச் சென்றடைய போதுமான போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்துத் தோ்வு மையங்களிலும் காற்றோட்டத்துடனும் போதிய வெளிச்சத்துடனும் கூடிய தோ்வறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு சொல்வதை எழுதுபவா், மொழிப்பாட விலக்கு, தோ்வு எழுத கூடுதல் ஒரு மணி நேரம் ஆகிய சலுகைகள் தோ்வுத் துறையால் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு தரைத் தளத்திலேயே தோ்வறைகள் தனியே ஒதுக்கப்பட்டுள்ளது.