திருச்சி பஞ்சப்பூரில் பிரதமர் மோடி இன்று மாலையில் அரசுத் திட்டங்களைத் தொடங்கிவைத்தார். பின்னர் அவருடைய தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் கலந்துகொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதில் அவர் பேசியபோது, ஆடிப் பெருக்கில் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்; அதைப் போல தமிழ்நாட்டில் இப்போது தேர்தல் காலம் அமைந்திருக்கிறது என்றார்.
மாநிலத்தில், ஒரே குடும்பத்துக்குமான அரசாக அல்லாமல் அனைத்து குடும்பங்களுக்குமான அரசாக வரும் தேர்தலில் அமையவுள்ள அரசு இருக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
காங்கிரஸ்- தி.மு.க. ஆட்சிக் காலங்களைவிட 57 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நான்கு மடங்கு கூடுதலாக நெடுஞ்சாலைக்கு பா.ஜ.க. கூட்டணி அரசு கடந்த பத்தாண்டுகளில் ஒதுக்கியுள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதமாகக் கூறினார்.
விஞ்ஞான ஊழலுக்குப் பேர் போன தி.மு.க.வில் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கூட பெரிய அளவுக்கு ஊழல் புரிந்துள்ளார்; ஒரே குடும்பத்தின் ஏடிஎம் ஆக ஊழல் பணம் மாறியுள்ளது என்றும் பிரதமர் கடுமையாகச் சாடினார்.