தமிழ் நாடு

தி.மு.க.வினரிடம் பெண்கள் மசோதா பற்றி கேளுங்கள்- பிரதமர் மோடி பேச்சு

Staff Writer

பெண்கள் மசோதாவை நிறைவேற்ற விடாமல் தி.மு.க. தடுத்ததைப் பற்றி அவர்களிடம் கேள்வி கேட்கவேண்டும் என்று பிரதமர் மோடி கோவை பிரச்சாரக் கூட்டத்தில் இன்று பேசினார். 

கோவையில் உள்ள கொடீசியா மைதானத்தில் இன்று மாலையில் பிரதமரின் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பேசினார். 

பிரதமர் பேசுகையில், பெண்களுக்கு அதிகாரம் கிடைப்பதை தி.மு.க.வும் காங்கிரசும் விரும்பவில்லை; அது நிறைவேறாமல் அவர்கள் தடுத்துவிட்டனர்; அவர்களின் முகங்களை அறிந்துகொள்ள வேண்டும்; அது நிறைவேறி இருந்தால் சாதாரண பெண்கள் எம்.எல்.ஏ. ஆகியிருப்பார்கள் என்று குறிப்பிட்டார். 

தமிழகத்தில் ஒரே குடும்பத்தின் ஆட்சி நடக்கிறது; அவர்கள் திரைப்படம் முதலிய துறைகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர்; தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றால் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்போம் என்றும் மோடி பேசினார்.

பா.ஜ.க.வினர் ஒவ்வொரு வாக்காளரையும் நேரில் சந்திக்குமாறும் அவர் கூறினார்.