கவிஞர் புவியரசு  
தமிழ் நாடு

கோவையின் ஆளுமை கவிஞர் புவியரசு காலமானார்!

Staff Writer

மொழிபெயர்ப்பாளரும், எழுத்தாளருமான கோவையைச் சேர்ந்த கவிஞர் புவியரசு இன்று காலமானார்.

உடுமலைப்பேட்டைக்கு அருகிலுள்ள லிங்கவநாயக்கன் புதூர் கிராமத்தில் சுப்பையா என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் கவிஞர் புவியரசு.

வானம்பாடி என்ற இயக்கத்தை உருவாக்கிய பெருமைக்கு உரியவர் இவர். இந்திய அரசின் சாகித்ய அகாடமி விருதை இரண்டு முறை பெற்றுள்ள படைப்பாளி. மேலும், கலைஞர் பொற்கிழி விருது, கேரள பண்பாட்டு மையத்தின் சாகித்திய புரஸ்கார் விருதையும் பெற்றுள்ளார்.

இவர் இளநிலை பட்டத்தைக் கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியிலும் தமிழ் வித்வான் பட்டத்தைப் பேரூர் தமிழ்க் கல்லூரியிலும் பெற்றார். இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராகப் பணிபுரிந்தவர். இவரது படைப்புகள் 1952லிருந்து வெளிவர ஆரம்பித்தன. 

தனது இலக்கியப் பயணத்தில் 80க்கும் மேற்பட்ட படைப்புகளைத் தந்துள்ளார். ஷேக்ஸ்பியர், கலீல் கிப்ரான், உமர் கய்யாம், ஓஷோ, ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

இவரது கவிதைகள் ஆங்கிலம், உருசிய மொழிகளிலும், இந்திய மொழிகளான மலையாளம், கன்னடம், இந்தி ஆகியவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram