தேர்தல் ஆணையம் 
தமிழ் நாடு

3 சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது!

Staff Writer

புதுச்சேரி, கேரளம், அசாம் ஆகிய மூன்று சட்டப்பேரவைகளுக்கான பிரச்சாரம் இன்றுடன் முடிவடைந்தது.

நாளைமறுநாள் அங்கு தேர்தல் நடைபெறவுள்ளது. 

மூன்று கட்டங்களாக ஐந்து சட்டப்பேரவைகளுக்கு அறிவிக்கப்பட்ட தேர்தலில், முதல் கட்டம் வரும் 9ஆம் தேதி நடைபெறுகிறது. 

புதுச்சேரி சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கு 294 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பா.ஜ.க., காங்கிரஸ், த.வெ.க. என மூன்று கட்சிகளின் தரப்பில் அங்கு மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

கேரளத்தில் 140 தொகுதிகளுக்கு 883 வேட்பாளர்களும் அசாமில் 126 தொகுதிகளுக்கு 722 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

நாளைமறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு, இன்றுடன் பிரச்சாரம் நிறைவடைந்துள்ளது.