தமிழ் நாடு

வாணியம்பாடியில் வாக்குப்பதிவு நிறுத்தம்!

Staff Writer

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதியில் தி.மு.க., த.வெ.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டது. 

வாணியம்பாடி பெரிய பேட்டை பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இங்குள்ள 73ஆவது வாக்குச்சாவடியில் பெண் ஒருவர் இரண்டாவது முறையாக வாக்களிக்க முயன்றதாக த.வெ.க. தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது. 

தி.மு.க.வினர் இதை மறுத்தனர். 

இந்த விவகாரத்தில் இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். 

உடனே டி.எஸ்.பி. தலைமையிலான காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டு, அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஒருவழியாக நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.