அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்பவர்களின் எண்ணிக்கை உயர்வு 
தமிழ் நாடு

15 ஆண்டுகளில் 20% அதிகரித்த பிளாட்வாசிகள்!

Staff Writer

தமிழகத்தில் கடந்த 2011ஆம் ஆண்டை விட, அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழும் மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டைவிட அடுக்குமாடிக் குடியிருப்புகளின் எண்ணிக்கை 15% அதிகரித்துள்ளதாகவும், அந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழும் மக்களின் எண்ணிக்கை 20% அதிகரித்துள்ளதாகவும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் நடப்பு ஆண்டு ஜூன் மாதம் முதல் தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பணிகள் நடந்துவரும் நிலையில், இந்த மாதம் (ஆகஸ்ட்) முதல் வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது நடைபெற்று வரும் பணிகளின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மொத்தமாக 3.21 கோடி வீடுகள், கடந்த 2011ஆம் ஆண்டு இருந்ததாகவும், நடப்பு ஆண்டில் அதைவிட 10 முதல் 15% வீடுகளின் எண்ணிக்கையும், 20% வரை அடுக்குமாடி குடியிருப்பில் வாழும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram