பெஞ்சல் புயல் நிலவரம் நன்றி: பிரதீப் ஜான்
தமிழ் நாடு

வானிலை மையம் சொல்றதைக் கேளுங்க... பிரதீப் ஜானின் பெஞ்சல் புயல் அண்மைத் தகவல்!

Staff Writer

பெஞ்சல் புயல் நிலவரம் தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சற்றுமுன்னர் புதிய தகவலை வெளியிட்டுள்ளார். இன்று இரவோ அல்லது நாளை காலையோ புயல் கரையைக் கடக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

இன்று காலை 9.03 மணிக்கு அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

இந்த வானிலை முன்னறிவிப்புகள் தனிப்பட்டவை என்பதால், வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புகளை கவனிக்க வேண்டுகிறேன்.

மழை- சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தற்போது அடர்த்தியான மேகங்கள் நிலைகொண்டுள்ளன. அடுத்த 12 மணி நேரத்துக்கு இந்த வட்டாரத்தில் நல்ல மழைப்பொழிவு இருக்கும். புயல் மெதுவாக நகர்ந்துவருவதால் கனமான மழை பெய்யும். இரவிலிருந்து காலைவரை 12 செ.மீ. மழை பெய்துள்ளது. அடுத்த 12 - 18 மணி நேரம் மழை நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியுள்ளது.

எப்போது கரையைக் கடக்கும்?

சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையே மரக்காணத்துக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே புயல் கரையைக் கடக்கக்கூடும். எப்போது கரையைக் கடக்கும் என்பதைத் துல்லியமாகக் கணிக்கவேண்டியுள்ளது. பெரும்பாலும் இன்று இரவு முதல் நாளை காலைக்குள் கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கலாம்.

எனவே, புயல் கரையைக் கடக்கும்வரை மழை பெய்தபடி இருக்கும். கரையைக் கடப்பது தாமதம் ஆகிக்கொண்டே இருந்தால் அதுவரை மழை நீடிக்கும்.

காற்று

கடலோரப் பகுதிகளில் மாலை/ இரவு முதல் காற்றின் வேகம் 50- 70 கி.மீ. ஆக அதிகரிக்கும். ஆனால் காற்று பெரிய அச்சுறுத்தலாக இருக்காது.

இப்போதைய நிலவரப்படி, சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 12- 18 மணி நேரம் மழை இருக்கும்.