தமிழகத்தில் காலியான மாநிலங்களவை இடத்துக்கு காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்ரவர்த்தியை அக்கட்சி வேட்பாளராக அறிவித்தது. அதையடுத்து அவர் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள குறிப்பு சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
த.வெ.க. தலைமையில் காங்கிரஸ் கட்சி மட்டும் கூட்டணியில் இருப்பது இதுவரை இரு கட்சிகளாலும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. மற்றபடி, வி.சி.க., முஸ்லிம் லீக் ஆகிய அமைச்சரவைப் பங்காளிக் கட்சிகளும், வெளியிலிருந்து ஆதரிக்கும் இடதுசாரி கட்சிகளும் விஜய் கட்சியுடன் கூட்டணியில் இருப்பதாக அறிவிக்கவில்லை.
ஆனால், பிரவீன் சக்ரவர்த்தியோ தன்னுடைய நன்றி அறிவிப்பில், தமிழ்நாடு சமூகநீதி முற்போக்குக் கூட்டணி என ஒரு பெயரை அறிவித்திருக்கிறார்.
அரசியல் வட்டாரத்தில் அவர் இப்படி தன்னிச்சையாக அறிவித்திருப்பது பரபரப்பையும் சர்ச்சையையும் உண்டாக்கியுள்ளது.
சமூக ஊடகங்களில் இதுகுறித்து பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.