எடப்பாடி பழனிசாமி 
தமிழ் நாடு

விஜய் ஆட்சியின் 100 நாள் - எடப்பாடி பழனிசாமி கருத்து

Staff Writer

த.வெ.க. அரசு மேகதாது அணை விவகாரத்தில் மெத்தனம் காட்டுவதாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் இன்று அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

தஞ்சையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"ஜூன் மாதத்திலேயே நமக்கு தேவையான நீரை இந்த அரசு பெற்றிருக்க வேண்டும். ஆனால், இந்த அரசு பெற்றுத் தரவில்லை. த.வெ.க. அரசு ஆட்சி பொறுப்பேற்ற முதல் 100 நாள்களில், மக்களுக்காக எந்த ஒரு புதிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. இவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே விவசாயிகள், அரசு ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் ஆகியவர்களின் போராட்டத்தைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

வெறும் ரீல்ஸ் மட்டுமே வெளியிடுகிறார்கள்; மக்களுக்கான திட்டங்கள் எதுவும் இல்லை.

இந்த 3 மாதங்களில் ரூ.20,000 கோடி கடன் வாங்கியிருக்கிறார்கள்; ரூ.17,000 கோடி வருவாயைச் செலவு செய்திருக்கிறார்கள். அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு தி.மு.க. ஒதுக்கிய நிதியை இவர்கள் ஒதுக்கவில்லை.

நிதி நெருக்கடியில் இருக்கும் இந்த அரசிடம், நிதி தொடர்பான கேள்விகளுக்கு எந்த சரியான விளக்கமும் இல்லை.

த.வெ.க. அரசு மேகதாது அணை விவகாரத்தில் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே, இந்தப் போராட்டம் நடைபெறுகிறது." என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram