கோட்டை அருகில் புகை மூட்டம்; துணியால் மூக்கை மூடிக்கொண்டு பணியாற்றும் காவலர்கள் 
தமிழ் நாடு

கோட்டை அருகே திடீர் புகைமூட்டம்... மக்கள் கடும் அவதி!

Staff Writer

சென்னை தலைமைச்செயலகம் அருகில் இன்று முற்பகலில் திடீரெனப் புகைமூட்டம்ஏற்பட்டது. அத்துடன் கடும் நாற்றத்துடன் கண் எரிச்சலை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருந்தது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள், தலைமைச்செயலகத்துக்கு வேலையாக வந்தவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அவதி அடைந்தனர். பலர் மயக்கம் அடையும் நிலைக்குச் சென்றனர். அருகில் இருந்தவர்கள் அவர்களுக்கு உதவிசெய்தனர்.  

இதற்கான காரணம் தெரியாமல் ஊடகங்களில் நேரலைத் தகவல் வெளியானதும் தீயணைப்புப் படையினர் கோட்டைக்கு விரைந்தனர். 

விசாரணையில் கோட்டைக்கு எதிரே துறைமுகப் பகுதியில் கந்தகம் தேக்கி வைக்கப்பட்டிருந்த பகுதியிலிருந்துதான் நெடியும் புகையும் வந்தது கண்டறியப்பட்டது. 

தீயணைப்புப் படையினர் உடனடி நடவடிக்கையில் இறங்கி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். 

மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.