ராகுல் காந்தி 
தமிழ் நாடு

3 தொகுதிகளில் இராகுல்காந்தி நாளை பிரச்சாரம்!

Staff Writer

காங்கிரஸ் முக்கிய தலைவர் இராகுல்காந்தி கடைசிக் கட்டத்தில் தமிழகத்துக்கு பிரச்சாரத்துக்கு வருகிறார். நாளை பொன்னேரி, துறையூர், சோளிங்கர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்கிறார்.  

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் தொடக்கம் முதலே முரண்பாடாக நடந்துகொண்டு வருகிறது. பிரச்சாரம் உச்சகட்டத்தில் இருக்கும் நிலையில், எதிரணியில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் மோடி, அமித்ஷா முதலியவர்கள் எல்லாம் தமிழகத்துக்கு பல முறை வந்துபோய்விட்டார்கள். ஆனால் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக இராகுல்காந்தி எட்டிக்கூடப் பார்க்கவில்லை.

காங்கிரஸ் கட்சியினரிடமும்கூட இது கடும் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது. தி.மு.க.வினரும் இதனால் காங்கிரஸ் தொகுதிகளில் ஈடுபாடு காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனிடையே தொகுதி மறுவரையறை தொடர்பாக இராகுலுடன் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேசியதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில் இராகுல்காந்தி நாளை தமிழகத்துக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.