இரயில் கேட் 
தமிழ் நாடு

மீண்டும் இரயில் கேட் மூடவில்லை... கேட்கீப்பர் இடைநீக்கம்!

Staff Writer

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் கடந்த வாரம் இரயில் கடவையை மூடாமல் இருந்ததால் பள்ளி வேன் மீது இரயில்வண்டி மோதி 3 மாணவர்கள் கொல்லப்பட்டனர். அந்தத் துயரத்தின் சுவடு இன்னும் ஆறாதநிலையில், திருவண்ணாமலையில் அதேபோல ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. 

திருவண்ணாமலை மாவட்டம் தண்டரை தொடர்வண்டி நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், தண்டரை- திருக்கோயிலூருக்கு இடைப்பட்ட சந்திக்கடவையை காப்பாளர் இராமு மூடாமல் அலட்சியமாக இருந்துள்ளார். 

நேற்று காலை நாகர்கோவிலிலிருந்து கட்சிகூடாவுக்குச் சென்ற விரைவுத் தொடர்வண்டி அந்த இடத்தைக் கடந்துசெல்ல முயன்றபோது, கேட் மூடப்படாமல் இருந்துள்ளது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தொடர்வண்டி ஓட்டுநர் மேலதிகாரிகளுக்கு புகார் அளித்தார்.  

அதை விசாரித்த இரயில்வே அதிகாரிகள் இராமுவைப் பணியிடைநீக்கம் செய்துள்ளனர்.