தமிழகத்திற்கு அதிக மழைப் பொழிவைத் தரும் வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நேற்று, சென்னை உட்பட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், ஆங்காங்கே மழை பெய்தது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ளதால், தமிழகத்தின் பல்வேறு மாநிலங்களில் வரும் 18ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நீலகிரி, தேனி, கோவை ஆகிய மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், தென்காசி, கன்னியாகுமரி, திருச்சி, ராசிபுரம், சேலம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, கேரளத்தில் பலத்த மழை பெய்வதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
மத்திய கேரளம், அதை ஒட்டியுள்ள பகுதிகளிலும், கன்னியாகுமரி, அதை ஒட்டியுள்ள பகுதிகளில் கடல் மட்டத்திலிருந்து 1.5 கி.மீ. உயரத்தில் சூறாவளி சுழற்சி நிலவுவதால், கேரள மாநிலத்தின் ஒருசில பகுதிகளில் அக்டோபா் 15 முதல் 18ஆம் தேதி வரை பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.