தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு 
தமிழ் நாடு

தீபாவளிக்கு தமிழகத்தில் மழையா?

Staff Writer

தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 11ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலில் புதியதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதால், தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

தேனி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் 11 வரை தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பலத்த காற்றுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram