தமிழகத்தில் இன்றுமுதல் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி உட்பட்ட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி உட்பட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நாளை, நாளை மறுநாள் வடகடலோர தமிழக மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.