பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் தன் மகன் அன்புமணியைக் கட்சியைவிட்டு நீக்கியதாக இன்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் சற்றுமுன்னர் செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
பா.ம.க.வின் செயல்தலைவர் பதவியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் அன்புமணியை நீக்குவதாகவும், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் ஆலோசனைக்குப் பின்னர் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
அன்புமணியுடன் இருப்பவர்களை மன்னிப்பதற்குத் தயாராக இருப்பதாகவும் இராமதாசு தெரிவித்தார்.