மு.வீரபாண்டியன் 
தமிழ் நாடு

9 தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரிக்கை!

Staff Writer

இலங்கைக் கடற்படையினர் பிடித்துச்சென்ற 9 தமிஅக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

"இராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து 469 விசைப்படகுகளில், மீனவர்கள் நேற்றுமுன்தினம் கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்களில் 9 மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினர் அவர்களைக் கைதுசெய்து, அவர்களது உடைமைகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மாலிக்தினார், கயாஸ், செந்தில், கிரித்திசன், பிரவீன், அருள்லயோலா, சவுரி வினோத்வின், தேவசகாயம், இன்பென்ட் பிரசாத் ஆகிய 9 மீனவர்களையும் விடுவித்து, அவர்களது உடைமைகளையும் வெளியுறவுத்துறை அமைச்சகம் மீட்டுத்தர வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர், ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மீனவர்களை விடுதலை செய்ய உதவ வேண்டும்.” ” என்று மு.வீரபாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram