தமிழ் நாடு

பட்ஜெட்டில் புது அறிவிப்பு இல்லாதது ஏன்?

Staff Writer

சட்டப்பேரவையில் இன்று முன்வைக்கப்பட்ட அரசின் வரவு செலவுத் திட்ட அறிக்கையில் புதிய அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை. இதுகுறித்து தமிழக அரசின் சார்பில் விளக்கம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

அதில், “ தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கை இன்று (17-2-2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண்மை, உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோரால் தாக்கல் செய்யப்படுகின்றன.

பொதுவாக, இடைக்கால நிதிநிலை அறிக்கை என்பது அரசின் சாதனைகளை தெரிவிக்கும் அறிக்கையாக இருக்கும்.  மேலும், பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் இடைக்கால நிதிக்கு ஒப்புதல் கோரும் அறிக்கையாகவும் இருக்கும்.  இதுதான் இதுநாள் வரையில் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபாகும்.  எனவே, இடைக்கால நிதிநிலை அறிக்கையில், புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடுவது மரபு இல்லை.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.