கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் ராஜினாமா கடிதம் வழங்கிய நகர செயலாளர் பாபு, தரையில் விழுந்து வணங்கி கண்ணீருடன் வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது ராஜினாமா குறித்து மேடையில் அவர் பேசுகையில், ”பல மன உளைச்சல் இருந்தாலும், கழகம் வெற்றி பெற வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் தொடர்ந்து நகர செயலாளராக பணியாற்ற எனக்கு மனமில்லை. என்னோடு பணியாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தம்பி, ராஜீவ் காந்தியை அனைவரும் சேர்ந்து வெற்றிபெறச் செய்ய வேண்டும். நன்றி.”இவ்வாறு கூறிய அவர், தனது ராஜினாமா கடிதத்தை மாவட்டச் செயலாளர் குமரகுருவிடம் வழங்கிட்டு, எல்லோரும் முன்னிலையிலும் கீழே விழுந்து குடும்பிட்டுவிட்டு கூட்டத்தில் இருந்து வெளியேறினார். இதனால், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.