தமிழக சட்டமன்றம் dt next
தமிழ் நாடு

சட்டப்பேரவையின் முதல் பெண் செயலாளராகிறார் ஆர்.சாந்தி!

Staff Writer

தமிழக சட்டமன்றப் பேரவையின் முதல் பெண் செயலாளராக பதவியேற்க உள்ளார் ஆர்.சாந்தி.

இவர் கடந்த மார்ச் மாதம் சட்டமன்றத்தின் சிறப்புச் செயலாளராக பதவி உயர்வு பெற்றவர்.

தமிழக சட்டமன்றச் செயலாளராக நீண்ட காலமாக பணியாற்றி வந்த சீனிவாசன், தனது பதவிக்காலம் செப்டம்பர் 30 வரை முடிவடைய இருந்த நிலையில் முன்கூட்டியே பதவிவிலகினார். தனிப்பட்ட காரணங்களுக்காக தன் பதவியைவிட்டு விலகுவதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் அவர் கடிதத்தைச் சமர்பித்துள்ளார். இதையடுத்து சட்டப்பேரவையின் புதிய செயலாளராக சாந்தி நியமிக்கப்பட உள்ளார்.

1989-ல் சட்டமன்றத்தில் சேர்ந்த சீனிவாசன், 2018-ல் சட்டமன்றச் செயலாளராக நியமிக்கப்பட்டார். நவம்பர் 2023-ல் அவர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அவருக்கு மூன்றாண்டு கால நீட்டிப்பு வழங்கப்பட்டு, மறுநியமனம் செய்யப்பட்டார்.

சட்டமன்றச் செயலகத்தின் மிக முக்கியமான அதிகாரியான சட்டமன்றச் செயலாளர், சட்ட விதிகள், நடைமுறைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் குறித்து சபாநாயகருக்கு முதன்மை ஆலோசகராகப் பணியாற்றுவார்.

இவர் கடந்த தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு ஆட்சிக் காலங்களிலும் சட்டமன்றச் செயலாளராக பொறுப்பில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.