சட்டப்பேரவை 
தமிழ் நாடு

பா.ஜ.க. மட்டும் எதிர்ப்பு- நீட்டுக்கு எதிராகத் தீர்மானம்!

Staff Writer

நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் இன்று தமிழக அரசின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பா.ஜ.க. மட்டும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்து எதிர்ப்பைத் தெரிவித்தது.  

மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ், இதற்கான தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.

அதன்மீது தி.மு.க.வின் முத்துராஜா, பா.ம.க. சௌமியா அன்புமணி, தே.மு.தி.க.வின் பிரேமலதா முதலிய பலரும் பேசினர்.

பா.ஜ.க. உறுப்பினர் போஜராஜன் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.

உறுப்பினர்களின் கருத்துரைக்குப் பிறகு, தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.