மு.க.ஸ்டாலின் சாலைவலம் 
தமிழ் நாடு

தாராபுரம் தொகுதியில் மு.க.ஸ்டாலின் சாலைவலம்!

Staff Writer

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சாலைவலம் மேற்கொண்டார்.

வரும் அக்போபர் 6ஆம் தேதி, மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தி.மு.க. வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அமராவதி சிலையிலிருந்து பொள்ளாச்சி சாலை பெரியகடை வீதி வழியாக சாலை வலம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று மு.க. ஸ்டாலின் பேசவுள்ளார்.

சாலைவலம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலினுக்கு, வழிநெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram