தமிழ் நாடு

குதிரை பேரம்... சட்டப்பேரவையில் எடப்பாடியால் எழுந்த அமளி!

Staff Writer

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கைகள் தொடர்பான விவாதத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பேசினார். முக்கால் மணி நேரமாக அவர் மிகவும் சீரியசாகப் பேசிக்கொண்டிருந்தார்.

முடிக்கும் தறுவாயில் இந்த ஆட்சியில் நடக்கும் தவறான விசயம், குதிரை பேரம்தான் என்கிற பொருளில் குறிப்பிட்டதும், ஆளுங்கட்சித் தரப்பில் அமைச்சர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அமைச்சர் ஆதவ் எழுந்து, ஜெயலலிதா காலத்தில் இருந்த அ.தி.மு.க. இப்போது இல்லை; அதனால்தான் நீர்த்துப்போன கட்சி என முதலமைச்சர் கூறினார்; எடப்பாடி தலைமையால் அதிருப்தி அடைந்துதான் எம்.எல்.ஏ.கள் கட்சியிலிருந்து விலகுகிறார்கள் என்று கூறினார்.

அதற்கு மீண்டும் பழனிசாமி பதில் கூறினார்.

மேலும், அமைச்சர் நிர்மல்குமாரும், கூவத்தூர் இல்லை எனக் குறிப்பிட்டு விவாதத்தை கூடுதல் சூடாக்கினார்.

பின்னர், பழனிசாமி குதிரை பேரம் எனக் குறிப்பிட்டுப் பேசியவற்றை அவைக்குறிப்பிலிருந்து நீக்குவதாக பேரவைத்தலைவர் தெரிவித்தார்.

அ.தி.மு.க. தரப்பில் பழனிசாமி, கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், அமைச்சர் ஆதவ் பேசியதையும் நீக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதைப் பரிசீலிப்பதாக பேரவைத் தலைவர் பிரபாகர் கூறினார்.