பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் பல மாதங்களாகப் போராட்டம் நடத்திவருகின்றனர். கடந்த ஜூலை 31ஆம் தேதி முதல் இவர்களின் போராட்டம் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்துவருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று சென்னையில் தலைமைச்செயலகத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்று முதலமைச்சரிடம் மனு கொடுக்கும் போராட்டம் அறிவித்திருந்தனர்.
அதன்படி, இன்று காலை 10 மணியளவில் பாரிமுனை குறளகம் கட்டடத்தின் முன்பிருந்து அவர்கள் கோட்டையை நோக்கி புறப்படத் தயாராகினர்.
ஆனால், ஏற்கெனவே, அங்கு குவிக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான காவல்துறையினர் அவர்களை அனுமதிக்கவில்லை. தடையை மீறியவர்களைக் கைதுசெய்தனர்.