அமைச்சர் செந்தில் பாலாஜி 
தமிழ் நாடு

செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் வழங்கியது உச்ச நீதிமன்றம்!

Staff Writer

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது. மேலும், அவரை கைதுசெய்யவும் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், வழக்கிற்கு தொடர்புடைய சாட்சிகளைக் கலைக்கக் கூடாது என்பன உட்பட்ட நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது

முன்னதாக, செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். ஊழல் தடுப்பு - கண்காணிப்பு இயக்குநரகம் புதிய முதல் தகவல் அறிக்கையை பதிவுசெய்த நிலையில், அவரின் முன்ஜாமின் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மதுவிலக்கு - ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பணியாற்றியபோது, குறிப்பிட்ட மது உற்பத்தியாளர்களுக்குச் சாதகமாக நடந்துக்கொண்டதாகவும், மதுவிற்கு விலை அதிகமாக நிர்ணயித்து குற்றச்செயலில் ஈடுபட்டதால் அரசு கரூவூலத்திற்கு இழப்பு ஏற்படுத்தியதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram