உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் சென்னையில் நேற்று காலமானார். அவரின் மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சில நாள்களுக்கு முன்னர் உடல்நலிவு அடைந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவருக்கு வயது 72.
கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2016வரை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய அவர், ஓய்வுக்குப் பின்னர் நுகர்வோர் ஆணையத் தலைவராகவும் பணியாற்றினார்.
பின்னர், கடந்த 2024ஆம் ஆண்டில் பட்டியல் சாதி பட்டியல் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
சென்னை, முகப்பேர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் பொதுமரியாதைக்காக வைக்கப்பட்ட அவரது உடல், அம்பத்தூர் இடுகாட்டில் எரியூட்டப்பட்டது.
அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர்நீதிமன்ற முன்னாள், இந்நாள் நீதிபதிகள், வழக்குரைஞர்கள், அரசுச் செயலர் இலட்சுமிப்ரியா முதலியோர் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.