முஸ்லிம் மாணவியருக்கு உதவித்தொகை  
தமிழ் நாடு

உயர்கல்வி முஸ்லிம் மாணவியருக்கு ரூ. 2,000 உதவித்தொகை- ரூ. 8.28 கோடி நிதி!

Staff Writer

சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் நலன் துறைக்கான அறிவிப்புகளை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம். ஷாஜஹான் வெளியிட்டார்.

அறிவிப்பு விவரம்:

1.   அரசு – அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9,10ஆம் வகுப்பு பயிலும் முஸ்லிம் மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ. 2,000 வீதம் கல்வி உதவித்தொகை வழங்க ரூ. 8.28 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

2.   அரசு – அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பில் சேரும் இஸ்லாமிய மாணவியர்களுக்கு அரசால் நியமிக்கப்பட்ட கட்டணத் தொகையை அரசே வழங்க ரூ. 20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

3.   சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்டங்கள் மக்களுக்கு விரைவாக சென்றடைய கன்னியாக்குமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், தென்காசி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 10 மாவட்டங்களில் ரூ. 4.45 கோடி செலவில் புதியதாக சிறுபான்மையினர் நல அலுவலர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

4.   முஸ்லிம் வக்ஃப் சொத்துகளையும், கிறித்துவ வழிபாட்டுத் தலங்களின் சொத்துகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் கட்டடங்களைக் கட்டவும் வட்டியில்லா கடன் வழங்க ரூ. 100 கோடி சுழல் நிதி ஒதுக்கப்படும்.

5.   தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிய தலைமை அலுவலகக் கட்டடம் கட்ட ரூ. 40 கோடி நிதி ஒதுக்கப்படும். 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram