பள்ளி மாணவர்கள் 
தமிழ் நாடு

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடக்கம்!

Staff Writer

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று தொடங்குகின்றன. கடந்த ஜூன் 1-ஆம் தேதி தொடங்க இருந்த பள்ளிகள், வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்திருந்ததால் ஜூன் 4-ஆம் தேதிக்கு (இன்று) தள்ளி வைக்கப்பட்டது. 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைத்து

பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு இலவச பாடநூல், நோட்டுப்புத்தகங்கள், சீருடைகள் வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு. மேலும், புதிய இலவச பேருந்து அட்டைகள் வழங்கும்வரை பழைய பேருந்து அட்டைகளை பயன்படுத்தி மாணவர்கள் பயணிக்கலாம் என்று போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.

வளாக பராமரிப்பு போன்ற பணிகள் முன்னரே முடித்து பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன.

திமுக ஆட்சியில் வழங்கப்பட்டுவந்த காலை உணவுத் திட்டம் தவெக ஆட்சியிலும் தொடர்கிறது. இன்று மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

மாணவர்களை வரவேற்க சில பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.