திருச்செந்தூர் உள்வாங்கிய கடல்  
தமிழ் நாடு

திருச்செந்தூரில் 70 அடிக்கு உள்வாங்கிய கடல்!

Staff Writer

திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் சித்திரை முழுநிலவு நாளை முன்னிட்டு பக்தர்கள் குவிந்தனர். கோடை விடுமுறை என்பதாலும் ஏராளமானவர்கள் திருச்செந்தூர் முருகன் கோயிலில் வழிபட வந்தவண்ணம் உள்ளனர். 

கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் குளியல் போடுவது வழக்கம். இன்று காலையில் பக்தர்கள் குளித்துக்கொண்டு இருக்கும்போது கடல் திடீரென உள்வாங்கியது. 

தகவல் அறிந்த காவல்துறையினரும் கோயில் நிர்வாகத்தினரும் அந்தப் பகுதிகளில் பக்தர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொண்டனர். ஆனாலும் ஆபத்து அறியாத பக்தர்கள் பலரும் வெளித் தெரிந்த பகுதிகளுக்கு உள்ளே சென்று நீராடலில் ஈடுபட்டனர்.