நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர் பிறந்த சிவகங்கை மாவட்டத்தில் இந்த முறை போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
காரைக்குடி தொகுதியில் அவர் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
திருச்சியில் இன்று நடைபெற்றுவரும் நா.த.க. வேட்பாளர்கள் 234 பேரின் அறிமுக விழாவில் அவர் இதை அறிவித்தார்.
வேலுநாச்சியார் உலவிய மண்ணில், மருதுபாண்டியர்கள் நடமாடிய நாட்டில், கம்பன், கண்ணதாசன் பிறந்த மண்ணில் பிறந்த தான் சொந்த மண்ணில் போட்டியிடவுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தன்னை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.