செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் தலைவர் 
தமிழ் நாடு

ரெய்டு உண்மைதான் - செல்வப்பெருந்தகை மறுப்பு

Staff Writer

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சில நாளுகளுக்கு முன்னர், வருமான வரித் துறையினர் தன்னை முடக்கும்வகையில் ரெய்டு நடத்தியதாகக் கூறியிருந்தார். அவரை வழிமொழிந்து முதலமைச்சர் ஸ்டாலினும் எதிர்க்கட்சித் தலைவர்களை முடக்க சதி செய்வதாகச் சாடியிருந்தார். 

அதையடுத்து, வருமான வரித் துறை தரப்பில் அப்படியொரு சோதனை ஏதும் நடத்தப்படவில்லை என மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அத்துடன், காவல்துறையிலும் செல்வப்பெருந்தகை மீது பொய்ப் புகாருக்காக நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்திருந்தது. 

இந்த நிலையில், தான் தங்கியிருந்த குடியிருப்பிலும் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது உண்மைதான் என்றும் இதுகுறித்து வரும் 24ஆம் தேதி தான் விளக்கம் அளிக்கவுள்ளதாகவும் இன்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.