கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மீதான துன்புறுத்தல் தொடர்பாக தமிழக அரசியலில் பரபரப்பு நிலவிக்கொண்டிருக்க, காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் பாதிக்கப்பட்டவருக்கு எதிராகப் பேசுவதா எனப் பிரச்னை எழுந்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் இன்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர் தெரியாமல் சொல்லிவிட்டார், விட்டுவிடுங்கள் எனக் கூறிவிட்டு நகைப்புடன் நகர்ந்தார்.