விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன் 
தமிழ் நாடு

தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்!

Staff Writer

முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தார். அவருக்கு நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன், தனது எம்.எல்.ஏ. பதவியை நேற்று காலை ராஜினானா செய்தாா்.

இதனைத் தொடர்ந்து, சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் வீட்டுக்கு நேற்று மாலை நேரில் சென்று விஜய்யை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த நிலையில், சென்னை பனையூரில் இன்று நடைபெற்ற நிகழ்வில், தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார்.

திருப்பூர் முன்னாள் எம்பி சத்யபாமா உள்பட செங்கோட்டையனின் ஆதரவாளர்களும் தவெகவில் இணைந்துள்ளனர்.

முன்னதாக பனையூர் தவெக அலுவலகத்துக்கு வருகைதந்த செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களை தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

தவெகவில் இணைந்துள்ள செங்கோட்டையனுக்கு தவெக நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.