பொம்மை சாரதி 
தமிழ் நாடு

மூத்த பத்திரிகையாளர் பொம்மை சாரதி மறைவு!

Staff Writer

தமிழ்த் திரையுலகின் மூத்த பத்திரிகையாளர் பொம்மை சாரதி (93), இன்று காலமானார்.

தமிழ்த் திரைப்படப் பத்திரிகைத் துறையில் தனது பயணத்தை ‘பேசும்படம்’ இதழில் துணை ஆசிரியராகத் தொடங்கிய அவர், தொடர்ந்து டால்டன் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் வெளியான ‘பொம்மை’, ‘மங்கை’ ஆகிய இதழ்களின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார்.

பின்னர், ‘குங்குமம்’, ‘சுமங்கலி’ ஆகிய இதழ்களிலும் பணியாற்றியுள்ளார்.

பின்னர், பொன்மாலை தொலைக்காட்சியில் பங்களிப்பை வழங்கியுள்ளார்.

பொம்மை சாரதி

எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன் ஆகியோருடன் இயல்பாகப் பேசி செய்தியை எடுப்பதில் வல்லவராக விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram