செந்தில் பாலாஜி 
தமிழ் நாடு

குதிரைபேரம்... செந்தில்பாலாஜி முன்ஜாமின் மனு!

Staff Writer

த.வெ.க. எம்.எல்.ஏ.களை விலைபேசிய குதிரைபேர வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவை விலைபேசி தி.மு.க.வுக்குச் சாதகமாகச் செயல்பட வைக்க முயன்றதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த குதிரை பேர வழக்கில் சென்னையைச் சேர்ந்த யூட்டியூபர் உட்பட 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதில், முக்கிய பின்னணியாகச் செயல்பட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரின் தம்பி அசோக்குமார் இருவரின் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அவர்கள் தலைமறைவாக இருந்துவரும் நிலையில், இருவருக்கும் காவல்துறை சார்பில் அனுப்பப்பட்ட அழைப்பாணையின்படி விசாரணைக்கும் ஆஜராகவில்லை.

இந்த நிலையில், செந்தில்பாலாஜி முன்பிணை மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram