கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், அம்மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தை விசாரிக்க திருப்பூர் எஸ்பி சிருஷ்டி சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
உயர்நீதிமன்ற நீதிபதி லட்சுமிநாராயணன், எஸ்.பி. நிலைக்குப் பதிலாக ஐ.ஜி. அல்லது டி.ஐ.ஜி. அதிகாரிகள் இந்த வழக்கு விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும், வரும் டிச.22ஆம் தேதிக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இன்று உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கு விசாரணை வரும் நவம்பர் 27ஆம் தேதி, வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி லட்சுமிநாராயணன் தெரிவித்தார்.
ஆனால், வேறு அதிகாரிகளைத் தெரிவிப்பதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில், த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் மீதான வழக்கின் விசாரணை அதிகாரியாக திருப்பூர் எஸ்.பி. சிருஷ்டி சிங் நியமிக்கப்பட்டுள்ளார். காவல் தலைமையக நிர்வாக ஐ.ஜி. காமினி இந்த விசாரணையைக் கண்காணிப்பார் என்று அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.