ஸ்ரீதர் வேம்பு 
தமிழ் நாடு

'பணம் கொடுக்காம காரியம் நடக்குது' -விஜய் ஆட்சிக்கு ஸ்ரீதர் வேம்பு பாராட்டு!

Staff Writer

தாங்கள் நடத்தும் கிராமப்புற தனியார் பள்ளிக்கு பணமில்லாமல் தானாகவே அனுமதி கிடைத்தது என்று ஜோஹோ மென்பொருள் நிறுவன உரிமையாளர் ஸ்ரீதர் வேம்பு பாராட்டு தெரிவித்துள்ளார்.  

வேம்புவின் இலவச கிராமப்புறப் பள்ளித் திட்டத்தின்படி கடந்த ஆட்சியில் அரசிடம் அனுமதி பெறுவதில் சிரமங்கள் இருந்தன என்றும் பணம் கொடுத்தால்தான் காரியம் நடக்கும் எனச் சொல்லிவிட்டார்கள் குறிப்பாக இலவசப் பள்ளி என்றாலும்கூட அதுதான் வழி எனக் கூறிவிட்டனர் என்றும்

ஆனால் த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகு இந்த அனுமதிகள் விரைவாகவும் தானாகவும் நடந்துவிட்டன என்றும் ஸ்ரீதர் வேம்பு தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக முதலமைச்சர் விஜய்க்கு நன்றியும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து பல்வேறு கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.